Wednesday, February 5, 2014

விமர்சனம் - தினத்தந்தி

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) இப்பொழுது கனடாவில் வசிக்கிறார். சிறந்த எழுத்தாளர்களாக புகழ் பெற்றுள்ள இலங்கைத் தமிழர்களில். இவரும் ஒருவர்.

அகிலின்
14ன்கு சிறுகதைகள் கொண்ட நூல் 'கூடுகள் சிதைந்தபோது" ஒவ்வொரு கதையும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள், இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளதால், உயிரோட்டத்துடன் விளங்குகின்றன.

'வலி" என்ற கதை, அவைம் சாப்பிடுகிற கதாநாயகன் சைவனாக மாறுவதைப் பற்றியது. ஜீவன் உள்ள கதை, 'கூடுகள் சிதைந்தபோது" கதை, மனதைத் தொடுகிறது. மொத்தத்தில், போர் காலத்தில் இலங்கைத் தமிழர்கள் அனுபவித்து துன்பங்களை கதைகளில் ஆசிரியர் வர்ணித்துள்ள விதம், இதயத்தைப் பிசைந்து கண்களில் கண்ணீரை வரச்செய்கின்றன.

(வெளியீடு: வம்சி புக்ஸ், 19,டி.எம்,சாரோன், திருவண்ணாமலை - 606 601, விலை:ரூ.120)
 
 
தினத்தந்தி (22-02-2012)
 

No comments:

Post a Comment