Wednesday, February 5, 2014

விமர்சனம் - குங்குமம்

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் அகில்இ 14 சிறுகதைகள் மூலம் போர்ச்சூழுலை ஒட்டிய ஈழத்தின் நெருக்கடியான வாழ்வியல் அனுபவங்களையும், அவலங்களையும் காட்சிப்படுத்துகிறார். குறிப்பாக 'பதவி உயர்வு', 'கூடுகள் சிதைந்தபோது' ஆகிய கதைகளின் துயரங்கள் இதயத்தை இளகச் செய்கின்றன. அகிலின் உறுத்தலற்ற ஈழத்து மொழிநடை இடைஞ்சலின்றி நம்மை அந்தச் சூழலுக்கே அழைத்துச் செல்கிறது. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, கலாநிதி க.குணராசா, கலாநிதி நா.சுப்பிரமணியன் ஆகியோரின் அணிந்துரைகள் சிறுகதை இலக்கியத்தின் மீதான நுட்பமான பார்வையைப் பதிவுசெய்கின்றன.
 
(பக்கம் 184, விலை: ரூ.120, வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை- 606601, பேச: 9444867023)

- குங்குமம் - (30-04-2012)

No comments:

Post a Comment